சென்னை : உயர் பதவிகளில் நேரடி நியமன முறையை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்பை அடுத்து அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது ஒன்றிய அரசு. 50% இடஒதுக்கீடு வரம்பை உடைத்து சாதிவாரி கணக்கெடுப்பின்படி சமூகநீதியை நிலை நாட்டுவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.