திண்டுக்கல் : டோலி கட்டி தூக்கிவந்த மலை கிராம பெண் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைத்து திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பழனி ஆர்டிஓ சிவராமன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பெண் இறந்த வெள்ளக்கெவி கிராமத்தில் உடனே மருத்துவ முகாம் நடதத ஆட்சியர் பூங்கொடி ஆணையிட்டுள்ளார்.