Monday, February 26, 2024
Home » திண்டுக்கல் சந்தையில் மலை பூண்டு விலை கிடுகிடு உயர்வு: தரத்தை பொறுத்து கிலோ ரூ.260 முதல் ரூ.650 வரை விற்பனை

திண்டுக்கல் சந்தையில் மலை பூண்டு விலை கிடுகிடு உயர்வு: தரத்தை பொறுத்து கிலோ ரூ.260 முதல் ரூ.650 வரை விற்பனை

by Lavanya

திண்டுக்கல்: திண்டுக்கல் சந்தையில் வரத்து குறைவால் மலைப்பூண்டு விலை கிலோ ரூ.650 வரை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தேவையான வெள்ளை பூண்டு இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், காஸ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் கொடைக்கானலில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இமாச்சலில் தற்போது பூண்டு சீசன் என்றாலும் அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் ரூ.100 முதல் ரூ.150 வரை தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வந்த வெள்ளை பூண்டு கிலோ ரூ.460 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் மருத்துவ குணமிக்க கொடைக்கானல் மலை பூண்டின் விளையும் ஏற்றம் கண்டு கிலோ ரூ.260 முதல் ரூ.650 வரை விறபனையாகிறது. இந்த விலை தற்காலிகமானது தான் என கூறும் வியாபாரிகள் மத்திய பிரதேசத்திலிருந்து பூண்டு வரத்து அதிகரித்ததும் அதாவது அடுத்த 10 நாட்களில் விலை குறைந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர். வெள்ளை பூண்டின் விலை திடீரென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். ஒரு கிலோ பூண்டு வாங்க வேண்டிய இடத்தில் விலை ஏற்றம் காரணமாக தற்போது அரைகிலோ, கால்கிலோ, பூண்டுகளை மட்டுமே வாங்கி செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi