திண்டுக்கல்: தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) 2வது தகுதிச் சுற்றில் இன்று சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் ஒரு கோல்வியை கூட சந்திக்காத பாபா அபரஜித் தலைமையிலான முன்னாள் சாம்பியன் சேப்பாக்கம், முதல் தகுதிச் சுற்றில் திருப்பூர் தமிழனிடம் அதிர்ச்சியை தோல்வியை சந்தித்தது. அதனால் திருப்பூர் நேரடியாக பைனலுக்கு முன்னேற சேப்பாக்கம் இன்று 2வது தகுதிச்சுற்றில் களம் காணுகிறது. அதை எதிர்த்து நடப்பு சாம்பியன் திண்டுக்கல் அணி விளையாட இருக்கிறது. அஸ்வின் தலைமையில் திண்டுக்கல் அணி அதிரடியாகவே விளையாடி வருகிறது. கடந்த ஆண்டும் பிளே ஆப் சுற்றில் திண்டுக்கல்-சேப்பாக்கம் அணிகள் மோதின. அதில் திண்டுக்கல் வென்றது. இந்த முறை வெல்லப்போவது முன்னாள் சாம்பியனா, நடப்பு சாம்பியனா என்ற கேள்விக்கு இன்று விடை தெரியும்.
திண்டுக்கல்-சேப்பாக்கம் மோதும் குவாலிபயர்
0
previous post