திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் அலுவலகத்தில் 3-வது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம். இவர் திண்டுக்கலில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும், மணல் குவாரி, ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டி விற்பனை செய்வது, செங்கல் சூலை என மாவட்ட அளவில் பல தொழில்களை செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகம் உட்பட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மணிநேரத்திற்கு மேலாக 2 கார்களில் வந்த 6பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே 3 முறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது முறையாக சோதனை நடைபெறுகிறது. மணல் குவாரி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சோதனை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி நிகழ்விடத்தில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2023ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக நடந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடக்கிறது குறிப்பிடத்தக்கது.