Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கிரெட்டா சம்மர் எடிஷன்

ஹூண்டாய் நிறுவனம், கிரெட்டா சம்மர் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் மொத்தம் 6 வேரியண்ட்கள் உள்ளன. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் வேரியண்ட்களில் கிடைக்கும். பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 143.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். வேரியண்ட்டுக்கு ஏற்ப பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குவாட் பீம் எல்இடி ஹெட் லாம்ப், எல்இடி டெயில் லாம்ப்கள், ஸ்மார்ட் கீ, புஷ் பட்டன் ஸ்டார்ட், பின்புற விண்டோ சன்ஷேட், ரியர் கேமரா, டேஷ் கேம், 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர், சரவுண்ட் வியூ மானிட்டர், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், டேஷ்கேமில் பிரத்யேக ஆப்ஸ் மூலம் இணைத்து டிரைவிங், எமெர்ஜென்சி மற்றும் நிகழ்வுகளை பதிவு செய்தல், போட்டோ எடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். வேரியண்ட்டுகளுக்கு ஏற்ப சில அம்சங்கள் மாறுபடும்.

இஎக்ஸ், இஎக்ஸ் (ஓ), எஸ் (ஓ), எஸ் (ஓ) நைட், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் பிரீமியம் ஆகிய சம்மர் எடிஷன்கள் உள்ளன. துவக்க வேரியண்டான இஎக்ஸ் சம்மர் எடிஷன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் சுமார் ரூ. 12,05,900 எனவும், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மேனுவல் சுமார் ரூ.13,61,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான எஸ்எக்ஸ் பிரீமியம் சம்மர் எடிஷன் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் சுமார் ரூ.16,33,400, ஆட்டோமேட்டிக் சுமார் ரூ.17,77,900, 1.5 லிட்டர் டீசல் சுமார் ரூ.17,88,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.