பிஎம்டபிள்யூ நிறுவனம், எப் 450 ஜிஎஸ் கான்செப்ட் மோட்டார் சைக்கிளை மிலன் மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப் படுத்தியிருந்தது. தற்போது இந்த மோட்டார் சைக்கிளை இந்த நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ளது. இதில், 420 சிசி பேரரல் டிவின் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 48 எச்பி பவரையும், 6,750 ஆர்பிஎம்-ல் 43 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்பறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள், டைனமிக் பிரேக் லைட், 6.5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, புளூடூத் இணைப்பு வசதி, எல்இடி லைட்டுகள், ஏபிஎஸ் பரோ, டார்க்யூ மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பேஸ், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் ஜிஎஸ் டிராபி என 3 வேரியண்ட்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ. 4.7 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement



