மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், ஏஎம்ஜி ஏ45 எஸ் ஏரோடிராக் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 421 எச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதே இன்ஜின்தான் ஸ்டாண்டர்டு ஏ45 எஸ் வேரியண்டிலும் உள்ளது. இது அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக 270 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். ரியர் விங், முன்புற ஸ்பிளிட்டர்கள் உள்ளன. அதிக வேகத்தில் செல்லும்போதும் சீராக இருப்பதற்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 19 அங்குல அலாய் வீல்கள் உள்ளன. இந்த காரின் ஷோரூம் விலை சுமார் ரூ.87 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+


