Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உணவே மருந்து!

*பச்சரிசி மாவு சிறிது நீர் விட்டு, அத்துடன் சிறிது , மஞ்சள் தூளையும் போட்டு கலந்து மை போல அரைத்து சூடுபடுத்தி கை பொறுக்கும் சூட்டில் எடுத்து கட்டிகளின் மீது வைத்துக்

கட்டினால் கட்டிகள் குணமாகும்.

*எலுமிச்சம் பழச் சாற்றையும் சிறிது உளுந்து மாவையும், கலந்து அந்தக் கலவையைச் சேற்றுப் புண்ணின் மீது தடவி வந்தால் சேற்றுப் புண் குணமாகும்.

*தினமும் சில உலர்ந்த திராட்சை பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

*அரைக் கீரையை வாரத்தில் 2 நாட்களுக்குத் தொடர்ந்து உணவுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால் கண்களும் குளிர்ச்சியடையும்; உடலும் நன்கு வலிமை பெறும்.

* நரம்புத் தளர்ச்சி, உள்ளவர்களுக்குப் போதிய நிவாரணம் அளிப்பதில் நிகரற்றவை - உளுந்து , கேழ்வரகு, சம்பா, கோதுமை, மூளைக்கட்டிய பயறு வகைகள், முழு நெல்லிக்காய், முந்திரிப் பருப்பு, முருங்கைப் பூ, மிளகு, ஆகியவை.

* பப்பாளிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான நோய்கள் அகலும்.

*இரவில் நல்ல கனிந்த பூவன் வாழைப்பழங்கள் அல்லது மாம்பழங்களைச் சாப்பிடும் பழக்கம் இருந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

*முட்டைக்கோஸ் நறுக்கி சுத்தம் செய்து இரண்டு டம்ளர் தண்ணீரில் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்து , அந்தத் தண்ணீரைப் பருகி வந்தால் குடற்புண் ஆறும்.

*சாதம் வடித்த நீரில் சிறிது மஞ்சள் தூளையும் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, சூடாகச் சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம் நீங்கும்.

*காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் விழுங்கிவிட்டு பசுந்தயிர் பருகி வந்தால் வயிற்று பிரச்னைகள் தீரும்.

- எல். நஞ்சன்