கன்னியாகுமரி: டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாக மிரட்டி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர். 3 பேரை கைது செய்து கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். டிஜிட்டல் கைது செய்துள்ளதாக மிரட்டி ரூ.70 லட்சம் மற்றும் ரூ.26.54 லட்சம் மோசடியாக பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement


