Wednesday, April 24, 2024
Home » லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் தூங்காநகரம்: தேர்களை தயார்படுத்தும் பணி துவக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் தூங்காநகரம்: தேர்களை தயார்படுத்தும் பணி துவக்கம்

by Neethimaan

மதுரை: திருவிழாக்களில் மகுடம் சூட்டி கொள்ளும் மகத்தான சித்திரை பெருவிழாவிற்கு மதுரை தயாராகி வருகிறது. இதன் துவக்கமாக தேரோட்டத்திற்கு தேர்கள் தயார்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளது. மேலும் சித்திரை வீதிகளில் பந்தல் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா வரும் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சியம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வீதி உலாவின் போது, சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் ஆட ஆடைகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10ம் திருநாளான திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் பல லட்சம் மதிப்பு பூக்களை கொண்டு வண்ண மயமான பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து அன்னதானம், மொய் விருந்து போன்றவைக்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் அதிகாலை விமரிசையாக தொடங்கி 2 தேர்களும் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டு மீனாட்சியம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளி, அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சியம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்படுவார்கள்.

அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டு, அதன்பிறகு பிரியாவிடை- சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சியம்மன் சிறிய தேரில் எழுந்தருளி, பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து செல்வார்கள், தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து சுவாமி -அம்மன் தேரை இழுத்துச் சென்று, 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி வலம் வரும். தேருக்கு முன்பாக பக்தர்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் செல்வர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லும், அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனியே சிறிய சப்பரங்களில் செல்ல, பகல் 12 மணியளவில் மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் நிலையை வந்தடையும். இதற்காக தேரடி வீதியில் உள்ள இரு தேர்களையும் சீரமைக்கும் பணி தொடங்கியது.

கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. திருவிழாவை காணவரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி, மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

30 அடி உயரத்தில் பந்தல்
மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் நான்கு மாசி வீதிகளிலும் புறப்பாடு நடைபெறும். எனவே, மதுரை நகர் விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு மற்றும் நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30அடி உயரத்திற்கு மேல் அமைத்துக் கொள்ளும் படியும் மற்றும் வேப்பிலைத் தோரணங்கள் ஆகியவற்றினையும் சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைத்துக் கொள்ளும் படியும் பொதுமக்கள் வியாபாரப் பெருமக்கள் ஆகியோரை கோயில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். திருவிழா நாட்களில் காலை, இரவு இரு வேளைகளிலும் திருவீதிளில் சுவாமி புறப்பாடாகி வரும் அச்சமயம் பக்தர்களால் சுவாமிக்கு சாத்துப்படி செய்ய இறைவனுக்கு உகந்த மாலைகள் சாத்துப்படி செய்யலாம்.

(கேந்திபூ. மருதை வேர்கள் வைத்துக் கட்டப்பட்டமாலைகள் சாத்துப்படிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது). திருக் கல்யாணத்தன்று மூலஸ்தான அம்மன், சுவாமிக்கும், உற்சவர் அம்மன் சுவாமிக்கும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மட்டுமே பட்டுப் பரிவட்டங்கள் சாத்தப்படும். உபயதாரர் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கை பரிவட்டங்கள் வாமாலையாக சூட்டப்படும். மேற்படி உற்சவம் ஆரம்பம் முதல் அழகர்கோயில், கள்ளழகர் ஆஸ்தானம் சேரும் நாளான ஏப்.23ம் தேதி முடிய கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபயதிருக்கல்யாணம், தங்க ரதம் உலா ஆகிய சேவைகள் பதிவு செய்து நடத்தப்படுவதில்லை என கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

30 அடி உயரத்தில் பந்தல்
மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் நான்கு மாசி வீதிகளிலும் புறப்பாடு நடைபெறும். எனவே, மதுரை நகர் விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு மற்றும் நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30அடி உயரத்திற்கு மேல் அமைத்துக் கொள்ளும் படியும் மற்றும் வேப்பிலைத் தோரணங்கள் ஆகியவற்றினையும் சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைத்துக் கொள்ளும் படியும் பொதுமக்கள் வியாபாரப் பெருமக்கள் ஆகியோரை கோயில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். திருவிழா நாட்களில் காலை, இரவு இரு வேளைகளிலும் திருவீதிளில் சுவாமி புறப்பாடாகி வரும் அச்சமயம் பக்தர்களால் சுவாமிக்கு சாத்துப்படி செய்ய இறைவனுக்கு உகந்த மாலைகள் சாத்துப்படி செய்யலாம். (கேந்திபூ. மருதை வேர்கள் வைத்துக் கட்டப்பட்டமாலைகள் சாத்துப்படிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது).

திருக் கல்யாணத்தன்று மூலஸ்தான அம்மன், சுவாமிக்கும், உற்சவர் அம்மன் சுவாமிக்கும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மட்டுமே பட்டுப் பரிவட்டங்கள் சாத்தப்படும். உபயதாரர் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கை பரிவட்டங்கள் வாமாலையாக சூட்டப்படும். மேற்படி உற்சவம் ஆரம்பம் முதல் அழகர்கோயில், கள்ளழகர் ஆஸ்தானம் சேரும் நாளான ஏப்.23ம் தேதி முடிய கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபயதிருக்கல்யாணம், தங்க ரதம் உலா ஆகிய சேவைகள் பதிவு செய்து நடத்தப்படுவதில்லை என கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

six − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi