Sunday, February 25, 2024
Home » தாறுமாறாக பேசி தர்மசங்கடத்தில் நெளிந்த தாமரை நிர்வாகியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

தாறுமாறாக பேசி தர்மசங்கடத்தில் நெளிந்த தாமரை நிர்வாகியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘எங்க கட்சிக்கு இருப்பது 5 பர்சன்ட் ஓட்டுதான் என்று பப்ளிக்கா பேசிட்டாராமே ஒரு தலைவரு..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சிக்காரர்களின் உதாரை அம்பலப்படுத்த அவுகளே போதும். வேறயாரும் தேவையில்லன்னு சொல்ற அளவுக்கு மாநில நிர்வாகி ஒருவரின் மீடியா மீட் இருந்ததாம். சமீபத்தில் தாமரையின் டெபுடி லீடரான முன்னாள் எம்பி, மாங்கனி டிஸ்ட்ரிக்டில் பல்வேறு பங்ஷன்களில் கலந்துக்கிட்டாராம். இப்படி போகும் இடங்களில் எல்லாம் மீடியாக்களும் அவரை பாலோ பண்ணிக்கிட்டே இருந்தாங்களாம். இதனால் உற்சாகமான டெபுடி லீடரு, ப்ராங்கா பேசுறேன் என்ற பெயரில் பேசியது எல்லாம் சர்ச்சையா மாறி இருக்காம். குறிப்பாக தமிழ்நாட்டின் அனைத்து பார்லிமென்ட் தொகுதிகளிலும் தாமரை தான் போட்டியிடும் என்றாராம். அப்போ கூட்டணிக்கு யாருமே வரலையா என்று கொஸ்டீன் வந்ததாம். சுதாரிச்சுக்கிட்ட டெபுடி, கூட்டணி கட்சிகள் எல்லாம் தாமரையில போட்டியிடுவாங்க என்றாராம். இதை கேள்விப்பட்டு பேச்சுவார்த்தையில் இருக்கும் மாம்பழம், முரசு கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் ஷாக்காயிட்டாங்களாம். இது எல்லாத்துக்கும் மேலாக ஒரு விஷயத்தை சொன்னாராம். தமிழ்நாட்டில் எங்கள் கட்சிக்கு இருப்பது 5 பர்சன்ட் ஓட்டு தான் என்று போட்டு உடைத்தாராம். அருகில் இருந்த நிர்வாகிகளின் பார்வை வேற மாதிரி இருந்ததாம். இதனால் மறுபடியும் சுதாரிச்சுக்கிட்ட டெபுடி, அடுத்த நொடியே 95 பர்சன்ட் பப்ளிக் ஓட்டு எங்களுக்குத்தான் விழும் என்று சொல்லி சிரிப்புக் காட்டினாராம். சிறப்பான பிரஸ்மீட், அரிய தகவல்கள் என்று நக்கலடித்தபடியே டெபுடியை விட்டு ஓட்டம் பிடிச்சாங்களாம் மீடியாக்காரர்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பொதுக்கூட்டத்தில் காலி ேசர்களே தெரிந்ததால் குக்கர் தலைவர் அப்செட் ஆனதா சேதி வருதே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சிய மாவட்ட திலகர் திடலில் குக்கர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. குக்கர் தலைமையானவர் பங்கேற்றதால் கூட்டம் அதிகம் காட்ட வேண்டும் என தலைமையிடத்தில் இருந்து முதல்நாளே மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உத்தரவு வந்ததாம்… பொதுக்கூட்டம் இரவு நேரம் என்பதால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் காட்ட முடியா விட்டாலும் கொஞ்சம் ஒரு அளவுக்காவது கூட்டத்தை காட்ட வேண்டும் என நினைத்த மாவட்ட பொறுப்பாளர்கள், இதற்காக நெற்களஞ்சியம், மனுநீதிசோழன், கடலோர மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர்.
ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு குக்கர் தலைமையானவர் வராமல் பல மணி நேரம் கழித்து வந்தார். இதனால் கூடியிருந்த கொஞ்சம் பேரும் குக்கர் தலைமையானவர் பேசுவதற்கு முன்னதாகவே கிளம்பி விட்டனர். இதனால் பெரும்பாலான சேர்கள் காலியாகவே கிடந்துள்ளது. இதனை நேரில் பார்த்து கடும் அப்செட் ஆன குக்கர் தலைமையானவர் இருக முகத்துடன் பேச ஆரம்பித்தவர் முடிக்கும் போது இருக முகத்துடன் முடித்துள்ளார். நெற்களஞ்சியம் மாவட்டத்தில் குக்கர் கட்சியில் சொல்லும் அளவுக்கு தொண்டர்கள் இல்லை என்றாலும், கட்சியில் இருக்க கூடிய நிர்வாகிகள், தொண்டர்கள் கூட வரவில்லை. இதில் வந்திருந்தவர்களும் தலைமையானவர் பேச ஆரம்பிப்பதற்குள் புறப்பட்டு சென்றது கட்சிக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில் கோஷ்டி மோதல் தேர்தல்ல எதிரொலிக்குமாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக கடந்த இலை கட்சி ஆட்சியின்போது குயின்பேட்டை, மிஸ்டர் பத்து, வெயிலூர் என்று 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வெயிலூர் மற்றும் குயின்பேட்டை மாவட்டத்தில் கட்சி நிர்வாகத்தையும் இலை கட்சி தலைமை இரண்டாக பிரித்தது. வெயிலூரில் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் என்று பிரித்த நிலையில், குயின்பேட்டை மாவட்டத்தில் குயின்பேட்டை, கோணம் என்று இருபிரிவாக பிரித்தது. இதில் குயின்பேட்டையில் கதர்கட்சியில் இருந்து இலைக்கட்சிக்கு தாவிய சுகமானவருக்கு, வெயிலூரை போன்றே, மாவட்ட செயலாளர் பதவியை வீரமானவர் தலைமையிடத்தில் அடம் பிடித்து வாங்கி தந்தாராம். ஆனால், தான் மாவட்ட செயலாளராக உள்ள மிஸ்டர் பத்து மாவட்டத்துல மட்டும் தனது கட்டுப்பாட்டிலேயே கட்சி நிர்வாகத்தை பிரிக்காமல் ஒன்றாகவே வைத்துக் கொண்டாராம்.
குறிப்பாக குயின்பேட்டை மாவட்ட செயலாளராகவும், மாநில பொறுப்பு என்று 2 பொறுப்புகளில் கோலோச்சுகிறார். அதேசமயம் இலை கட்சி தலைமையுடன் நெருக்கமாக உள்ள குயின்பேட்ைடயில் 2 எழுத்து பெயர் கொண்ட மாவட்ட செயலாளரை மட்டம் தட்டும் வகையில், இவரால் பதவிக்கு வந்த புது மாவட்ட செயலாளரும், வீரமானவர் பேச்சை கேட்டு, 2 எழுத்து மாவட்ட செயலாளரை அழைக்காமல் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வர்றாராம். சில தினங்களுக்கு முன் மாஜி மாவட்ட செயலாளர் இல்ல திருமணத்துக்கு சேலத்துக்காரரை வரவேற்று அடிக்கப்பட்ட போஸ்டர்களிலும், விளம்பரங்களிலும் 2 எழுத்து மாவட்ட செயலாளர் படமோ, பெயரோ இல்லாமல் பார்த்துக் கொண்டாராம். அதேநேரத்தில் தனது குருவான மிஸ்டர் பத்து மாஜி மந்திரியின் படத்தை தலைவர்கள் வரிசையில் போட்டு விசுவாசத்தை காட்டினாராம். இதனால அதிருப்தியின் உச்சத்துக்கு போன 2 எழுத்து மாவட்ட செயலாளர் தனது ஆதரவாளர்களை திரட்டி கூட்டம் போட்டிருக்காராம். இந்த கோஷ்டி மோதல் வர்ற தேர்தல்ல எதிரொலிக்கும்னு ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

seven + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi