தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் செயல்படும் அரசு சமுதாய உடல்நல மையத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நுழைவுச்சீட்டு வழங்கும் அறை தொடங்கி மருந்து – மாத்திரை வழங்குமிடம், சிகிச்சை அறை, ஸ்கேனிங் வசதி, பல் சிகிச்சை மையம், அவசர சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தினார். புகார்பெட்டியை திறந்து, பொதுமக்களின் கடிதங்களை படித்துப் பார்த்தார். தொடர்ந்து, கழிவறைக்கு சென்று ஆய்வு நடத்தினார்.