தருமபுரி: தருமபுரியில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட மூவர் உயிரிழந்தனர். காரிமங்கலம் அருகே ஓடைச்சக்ரை பகுதியில் வீட்டின் அருகே துணிகள் உலர்த்தும் கம்பியில் இருந்து தாய் மாதம்மாள் (60) மீது மின்சாரம் பாய, காப்பாற்றச் சென்ற அவரது மகன் பெருமாள் (33) மற்றும் உறவினர் சரோஜா (60) என மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.