தருமபுரி: தருமபுரி மாதம் காரிமங்கலம் அருகே கடந்த மாதம் 28ம் தேதி காருடன் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். காரிமங்கலம் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தங்கம் கொள்ளையில் 15 பேர் ஈடுபட்டுள்ளனர்; 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை வைத்து கொள்ளையர்கள் புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்கியுள்ளனர் என்று கூறினார்.