தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 14 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் பென்னாகரத்துக்கும், காரிமங்கல வட்டாட்சியர் ரமேஷ் அரூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாலக்கோடு வட்டாட்சியராக கலைச்செல்வி நியமிக்கப்பட்டு 14 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.