தர்மபுரி, நவ.4: 108 ஆம்புலன்சில் பணியாற்ற தர்மபுரியில் நாளை(5ம் தேதி) ஆட்கள் தேர்வு முகாம் நடக்கிறது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் பணியாற்றுவதற்கான ஆட்கள் தேர்வு முகாம் நாளை(5ம் தேதி) நடக்கிறது. மருத்துவ உதவியாளர், ஓட்டுனருக்கான பணிகள் தேர்வு நடக்கிறது. மருத்துவ உதவியாளருக்கு பிஎஸ்சி நர்சிங் படித்திருக்க வேண்டும். ஓட்டுநருக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ உதவியாளருக்கு ₹15,435ம், ஓட்டுநருக்கு ₹15,235 ஊதியம் வழங்கப்படும். 12 மணி நேரம் பணியாற்ற வேண்டும். இரவு மற்றும் பகல் ஷிப்ட் இருக்கும். தேர்வு செய்யப்படுவோருக்கு வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு வரும் நபர்கள் அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும் என தர்மபுரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிறுவன மேலாளர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.