திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசனம், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றவர்கள் உள்பட 70,226 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 31,960 பேர் தங்கள் வேண்டுதல்படி தலைமுடி காணிக்கை செலுத்தினர். மேலும் நேற்று உண்டியல் காணிக்கை கணக்கிட்டதில் ரூ.4.30 கோடி கிடைத்துள்ளது.
இன்று காலை வைகுண்டம் காம்பளக்ஸில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் சுவாமியை தரிசிக்க சுமார் 18 மணி நேரமாகும் என தெரிகிறது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.