செங்கல்பட்டு: வளர்ச்சிப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள்நிறைவேற்றி தர வேண்டும் என 4 மாவட்ட ஆட்சியர்களுடனான கள ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அரசின் உட்கட்டமைப்பு பணிகள் பெரும் நிதிஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. உட்கட்டமைப்பு பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறாவிட்டால் திட்ட செலவு அதிகமாகும் என முதல்வர் தெரிவித்தார்.