டெல்லி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலியை செலுத்துகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமூக மேம்பாட்டில் முத்துராமலிங்கத் தேவரின் பணிகள் ஆழமாக வேரூன்றி இருந்தது. விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு, ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மிக பாதை தேச வளர்ச்சிக்கு ஒளியேற்றுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.