சேலம்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், கடந்த சில நாட்களுக்கு முன், சேலத்தில் நடந்த கூட்டத்தில் நடிகர் விஜய்யுடன் மாணவிகள் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக்கொள்வது தவறானது என விமர்சித்து பேசினார். வேல்முருகனின் இப்பேச்சு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தவெகவினர் தவாக தலைவர் வேல்முருகனை கண்டித்து, பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, பழைய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக சாலை,
புதிய பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் விஜய்யை கண்டித்தும், தவெக தொண்டர்களை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், எச்சரிக்கை விடுக்கும் வகையில் வாசகங்களை பதிவிட்டு, விஜய்யின் படத்தை சிவப்பு மையால் அழித்தது போல், அச்சிட்டுள்ளனர்.