புதுடெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு: தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட அரசு ஊழியரின் வருமான ஆதாரங்களுக்கு சம்மந்தமில்லாத அளவுக்கு சொத்துக்களை வைத்திருப்பது, முறைகேடு, மோசடி அல்லது பிற குற்றவியல் செயல்பாடுகள், செய்ய வேண்டிய வேலைக்காக அல்லது வேறு எந்த அதிகாரியுடனும் தனது செல்வாக்கைப் பயன்படுத்த சட்டப்பூர்வ ஊதியத்தைத் தவிர வேறு சலுகைககளைப் பெறுதல் அல்லது கேட்டல் வழக்குகளை ஊழல் கோணத்தில் அணுகலாம்.
பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, கணக்குகளைத் திறப்பதில் முறைகேடுகள், போலிக் கணக்குகளை உருவாக்குதல், வங்கியின் சொத்து, பணம் அல்லது சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் வங்கியின் பதிவுகளை பொய்யாக்குதல் உள்ளிட்ட தவறான செயல்களை ஊழல் கோணத்தில் பார்க்கலாம். வங்கியின் ரகசியத் தகவல்களை வெளியிடுவதும் ஊழல் கோணத்தின் வரம்பிற்குள் வரும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.