சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறையைச் சார்ந்த மாணவர்கள் வெம்பக்கேட்டையில் உள்ள சிபியோ, அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு மாணவர்கள் கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார விழாவில் சேகரித்த நிதியைக் கொண்டு குழந்தைகளுக்கு புத்தாடை, மதிய உணவு, இனிப்பு, பட்டாசு மற்றும் நன்கொடை வழங்கினர். மாணவர்களின் இத்தன்னார்வ தொண்டினை கல்லூரி முதல்வர் செந்தில்குமார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி, டீன் ஆராய்ச்சி ஷாகுல் கமீத், துறை ஆசிரியர்கள், துறைத் தலைவர் மற்றும் கல்லூரி நிர்வாகம் பாராட்டினர்.