மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் (43) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று இவர் அலுவலகம் செல்லாமல் மேல்மலையனூர்-வளத்தி சாலையில் இறங்கி அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றார். அங்கு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் குடும்ப பிரச்னையால் பூங்காவனம் தற்கொலை செய்தது தெரியவந்தது.