உத்திரமேரூர்: உத்திரமேரூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை பொறுப்பு துணை இயக்குநர் சதீஷ் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டங்கள் தரம் மற்றும் மருந்து, மாத்திரைகளின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்த நோயாளிகளிடம், மருத்துவர்களின் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது, மருத்துவ அலுவலர் ஜெதீபா, சுகாதார ஆய்வாளர் அம்பிகாபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.