மதுராந்தகம்: சாலவாக்கம் திமுக சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, 48 கிலோ கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கேக் வெட்டி ஏழை, எளியோருக்கு வழங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாலவாக்கம் பஜார் பகுதியில் நேற்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் டி.குமார், சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 48 திமுக கழக முன்னோடிகள் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ உடன் இணைந்து கேக் வெட்டி சிறுவர் – சிறுமியர், பெண்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள், வணிகர்கள் ஆகியோருக்கு வழங்கினார். இதனைத்தொடர்ந்து, கழக முன்னோடிகளுக்கு புத்தாடைகளும் உணவும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், அவைத்தலைவர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் ஞானசேகர், தமிழ்வேந்தன், சுஜாதா ஜெயராமன், ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியன், பாபாஷரீப், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவராமன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணி, துணை தலைவர் நந்தா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.