பெங்களூரு: கர்நாடக மாநில துணை முதல்வருக்கும் செயலாளர் நியமனம் செய்யும் சட்ட திருத்த மசோதா கொண்டுவந்து நடந்து முடிந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
அதை தொடர்ந்து மாநில அரசின் ஊழியர் நலம் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை முதன்மை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரின் செயலாளராக தமிழரான ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன் நியமனம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.