காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் ஒன்றிய அரசின் கோயில் நகர திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை புதுச்சேரி அரசு கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீடு தொகை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இது குறித்து நில உரிமையாளர்கள் கொடுத்த வழக்கில் காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் மாவட்ட துணை கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று நீதிமன்ற ஊழியர்கள் துணை கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய சென்றனர். அப்போது துணை கலெக்டர் ஜான்சன் 2 மாதத்திற்குள் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதாக உறுதி அளித்தார். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் ஜப்திஅறிவிப்பு நோட்டீஸை அங்கு ஒட்டி விட்டுச் சென்றனர்.