திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில் தமிழகத்திலுள்ள 13 மருத்துவ கல்லூரியில் டீன்களை நியமிக்காமல் இருப்பது நியாயமில்லை. அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அரிசி உற்பத்தி குறைந்ததால் விலையேற்றம் அடைந்துள்ளது. இதனால் கூட்டுறவு அங்காடியில் சன்ன ரக அரிசி விற்பனை செய்ய வேண்டும். போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியர்களின் பணப்பலன்கள், அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். மதுரையில் மென்பொருள் நிறுவனத்தாரிடம் கடன் வாங்கியவரிடம் 300 சதவிகிதம் வட்டி வசூல் செய்துள்ளனர். அந்த நிறுவனத்தை கைப்பற்ற முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கூல் லிப் என்ற புகையிலை எல்லா இடங்களிலும் கிடைப்பதால் அனைத்து வகை புகையிலை பொருட்களையும் தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
previous post