சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேற்று மாலை 4 மணி அளவில் ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறை சார்பிலும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை, செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் கேட்டறிந்து அறிவுரை வழங்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.