சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: செய்தி மக்கள் தொடர்பு துறையின் முன்னாள் இணை இயக்குநரும், எனது உறவினருமான மணிமாறன் மறைவு செய்தி கேட்டு வேதனைஅடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய சக செய்தி மக்கள் தொடர்புத்துறை பணியாளர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.