சென்னை: சென்னையில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நிலவேம்பு சுபசர குடிநீர் ஆகியவை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 3 நாட்கள் வரை காய்ச்சல் இருந்தால் மருந்தகங்களுக்குச் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.
3 நாட்கள் வரை காய்ச்சல் நீடித்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். காலி மனைகள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் நீர் தேங்காமல் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.