உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மேல்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நேரு, மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள், வட்ட செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், தனியார் இரும்பு தொழிற்சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, பழிவாங்கும் நோக்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும். தொழிலாளர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொழிலாளர்களை பழி வாங்கும் நோக்கினை தொழிற்சாலை நிர்வாகம் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழுக்கமிட்டனர்.