வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொன்ல்ட் டிரம்ப்(78) மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. ஜனநாயக கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிய நிலையில் துணைஅதிபர் கமலா ஹாரிஸ்(59) போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீசை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் நாடு முழுவதுமிருந்து ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் 4,567 பேர் பங்கேற்றனர். இதில் கமலா ஹாரீஸ் 99 சதவீத வாக்குகளை பெற்றார். இதையடுத்து டிரம்ப்புக்கு எதிராக கமலா ஹாரீஸ் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி விட்டது. ஜனநாயக கட்சியின் துணைஅதிபர் வேட்பாளராக மினசோட்டா மாகாண கவர்னர் டிம் வால்ஸ்(60) என்பவரை நிறுத்த கமலா ஹாரிஸ் முடிவு செய்துள்ளார்.