சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் இருந்து போதிய அளவு காவிரி நீர் பெறப்படாததால் டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தரப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.