சென்னை: டெல்டா விவசாயிகளை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். காவிரி நீரை கர்நாடகா திறக்காததால் வாடிய பயிரைக் கண்ட நாகை விவசாயி ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்த விவசாயி ராஜ்குமார் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிவாரணத் தொகையை அரசு தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.