சீஸ் தோசை
தேவையான பொருட்கள்
தோசை மாவு – தேவையான அளவு
தக்காளி சாஸ் – தேவையான அளவு
மொசரெல்லா சீஸ் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
முதலில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். தோசைக்கல் சூடானதும், ஒரு கரண்டி தோசை மாவை சூடான கல்லில் ஊற்றி மெல்லிய தோசையாக சுட வேண்டும். பின்பு அதன்மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு தோசையின் மேல் தக்காளி சாஸ் அல்லது தக்காளி கெட்சப்பை வைத்து சமமாக பரப்பி விட வேண்டும். பின்பு அதன்மேல் துருவிய சீஸை தூவி உருக விட வேண்டும். தோசையின் அடிப்பகுதி மொறுமொறுப்பானதும், தோசையை எடுத்தால், மொறுமொறுப்பான சீஸ் தோசை தயார்.
பீர்க்கங்காய் பஜ்ஜி
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் – 2
கடலை மாவு – 1 கப்
சோள மாவு – 1 கப்
சீரகப்பொடி – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
பீர்க்கங்காய் பஜ்ஜி செய்வதற்கு முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை வட்ட வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, சீரகப்பொடி, மல்லித்தூள், மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்பு அதில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக கலந்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், வட்டமாக நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பீர்க்கங்காய் பஜ்ஜி ரெடி.

காலிஃப்ளவர் போண்டா
தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர்,
வெங்காயம்,
கடலை மாவு – தலா ஒரு கப்,
சோள மாவு,
அரிசி மாவு – தலா 2 டீஸ்பூன்,
மிளகாய் பேஸ்ட்,
இஞ்சி பேஸ்ட் – தலா ஒரு டீஸ்பூன்,
வாழைக்காய் – 1,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
முதலில் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காலிஃப்ளவர், வெங்காயம், இஞ்சி பேஸ்ட், மிளகாய் பேஸ்ட், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து, பொடியாக நறுக்கி வதக்கிய காலிஃப்ளவர், வெங்காயத்துடன் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு மூன்றையும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உருண்டைகளை கரைத்த மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான காலிஃப்ளவர் போண்டா தயார்.
பீட்ரூட் பூரி
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள், ஓமம் – தலா 1 டீஸ்பூன்
பீட்ரூட் துருவல் – 3 கப்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
முதலில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு பச்சைப் பட்டாணியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகம், மிளகுத்தூள், ஓமம், பீட்ரூட் துருவல், கொத்தமல்லித்தழை, இஞ்சி – பூண்டு விழுது, அரைத்த பச்சைப் பட்டாணி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு பிசைந்த மாவை பூரிகளாக தேய்த்து வைத்துக் கொள்ளவும். கடைசியாக அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு பொரித்து எடுத்துப் பரிமாறினால் சத்தான பீட்ரூட் பூரி தயார்!
சிவப்பரிசி புட்டு
தேவையான பொருட்கள்
சிவப்பரிசி மாவு – 4 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள உப்புநீரை விட்டு, புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட வேண்டாம். புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும். பின்னர் புட்டுக்குழாயில், முதலில் சிறிது புட்டு மாவு போட்டு, பின்னர் துருவிய தேங்காயைப் போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாய் நிரம்பும் வரை இந்த முறையில் மாவை நிரப்பவும். பிறகு அந்தக் குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும். சூப்பரான சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு ரெடி.