ஏதாவது ஆற்று மீன் அல்லது கடல் மீன் – அரை கிலோ.
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் -100 கிராம்,
பூண்டு – 50 அல்லது 75 கிராம் (சுவைக்கு ஏற்ப)
தக்காளி – 200 கிராம்,
மிளகாய் – 4,
மல்லி கருவேப் பிலை -சிறிது,
புளி – எலுமிச்சை அளவு,
மிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – அரை ஸ்பூன்,
சீரகத் தூள் -அரை ஸ்பூன்,
மல்லித் தூள் – 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
செய்முறை :
வெங்காயம், தக்காளி,பூண்டு நறுக்கி எடுத்து வைக்கவும், மீனையும் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.ஒரு பெரிய மண் சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந் ததும், வெந்தயம் சேர்க்கவும். வெந்தயம் முழுதாக போட விரும்பா தவர்கள் வறுத்து பொடித்தும் போடலாம்.பின்பு கருவே ப்பிலை, மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து சிவற வதக்கவும். தக்காளி சேர்க்கவும், உப்பு சேர்க்கவும், பிரட்டி விட்டு சிறிது நேரம் வைக்கவும், தக்காளி நன்கு மசிந்து விடும்.
மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.மசாலா வெந்து இப்படி தளதளன்னு வரும். புளித் தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்ததும் மீனை போடவும்.5 நிமிட த்தில் மீன் வெந்து விடும், சிம்மில் வைக்கவும், எண்ணெய் மேலே வரும். மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பூண்டு மீன் குழம்பு ரெடி.