Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் இன்று முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்: பெட்ரோல், டீசல் நிரப்ப தடை..!

டெல்லி : டெல்லியில் இன்று முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளது. டெல்லியில் வாகனங்களால் காற்று மாசுபாடு அடைகிறது. இதனை கட்டுப்படுத்த ஒன்றிய அரசும், மாநில அரசும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 1ம்) தேதி முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது. டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களும் இன்று முதல் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் RC-ஐ சரிபார்த்த பின்னரே பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி இயக்கப்படும் 2 சக்கர வாகங்களுக்கு 5000 ரூபாயும் 4 சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாயும் அபராதம் விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் தற்போது, 15 ஆண்டுகளுக்கும் மேலான CNG வாகனங்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.