டெல்லி: டெல்லி திஹார் சிறையில் இருதரப்பு கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்துள்ளனர். மோதலில் காயமடைந்த கைதிகளுக்கு தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அண்மையில் திஹார் சிறையில் ரவுடிகும்பலை சேர்ந்த தில்லு எதிர்த்தரப்பு கைதிகளால் தாக்கி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.