சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்லி ஜங்க்புரா பகுதியில் சுமார் மூன்று தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வரும் மதராஸி முகாமில் உள்ள வீடுகளை கால்வாய் அகலப்படுத்தும் திட்டத்திற்காக இடித்து இன்றைக்கு அந்த மக்களுக்கு உரிய பாதுகாப்போ, உரிய இருப்பிடமே ஒதுக்காமல் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம்.
எனவே டெல்லி ஆளும் முதல்வரும், ஆட்சியாளர்களும் உடனடியாக மாற்று இருப்பிடத்தையும், வீடுகளையும், வசதிகளையும், ஏற்படுத்தி தந்து அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. உறுதியாக தமிழர்களுக்காக தேமுதிக துணை நிற்கும். மதராஸி பகுதி தமிழர்கள் பாதிக்கப்பட்ட அந்த பகுதியில் உடனடி தீர்வும் கிடைக்க வேண்டும்.