டெல்லி: டெல்லி அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவப்படத்துக்கு காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கலைஞர் திருவுருவப்படத்துக்கு சி.பி.எம். மூத்த தலைவர் பிருந்தா காரத், சமாஜ்வாதி எம்.பி. ராம்கோபால் யாதவ் மரியாதை செலுத்தினர். அதேபோல் திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையன், இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் கலைஞர் திருவுருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.