டெல்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 33-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தொடங்கியது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாதந்தோறும் தர வேண்டிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் பங்கேற்றார்.