டெல்லி: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 ஆவது கூட்டம் தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்திப் சக்சேனா பங்கேற்றுள்ளார். காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசின் நீர் பங்கீடு தொடர்பாக தொடர்ந்த அவசர மனு மீது முடிவு எடுக்கப்படவுள்ளது. தமிழக அரசு தொடர்ந்த அவசர மனு மீது காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது, காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது.