புதுடெல்லி: டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில், ஆணையத்தின் தலைவர் எஸ்.கேஹல்தார் தலைமையில் வரும் 11ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா புதுவை ஆகிய நான்கு மாநிலத்தின் தரப்பில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நிலுவை நீரை திறந்து விட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன், வைத்த கோரிக்கையால் இந்த கூட்டம் நடக்கிறது.