டெல்லி: டெல்லியில் காற்று மாசு காரணமாக 22 ரயில்கள் தாமதம், 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் காற்று மாசு காரணமாக 8 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. வழக்கமாக டெல்லியில் குளிர் காலங்களில்தான் காற்று மாசு மிக மோசமாக இருக்கும். ஆனால், இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாத இறுதியில் இருந்தே டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து நாளுக்கு நாள் மோசமடைந்துக்கொண்டே வருகிறது. அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பது, தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை முழுமையாக அமல்படுத்தப்படாதது போன்றவை டெல்லியின் காற்றின் தரம் மேலும் மோசமடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
நேற்றைய தினம், டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக புதிய கட்டுப்பாடுகளுடன் நிலை 4 அமலாகியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி வகுப்புகள் இணையம் வாயிலாக நடத்தப்படுகின்றன. மேலும், வீட்டில் காற்று மாசுபாட்டை குறைக்க மிரியம் காற்று சுத்திகரிப்பான் கருவியை மக்கள் உபயோக்கிறார்கள். டெல்லியில் காற்று மாசு காரணமாக 22 ரயில்கள் தாமதமடைந்துள்ளது. மேலும் 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் காற்று மாசு காரணமாக 8 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.