டெல்லி: டெல்லியில் உணவகம் ஒன்றில் தீப்பற்றியதால் அதில் சிக்கிய மக்கள் உயிர்பிழைக்க துடிக்கின்றனர். ஜங்கிள் ஜம்போரீ என்ற உணவகத்தில் திடீரென பற்றிய தீயில் அங்கு சாப்பிடச் சென்றவர்கள் சிக்கினர். பற்றி எரியும் நெருப்பில் இருந்து தப்பிக்க உணவகத்தின் மாடியில் இருந்து அடுத்த மாடிக்கு தாவினர். ரஜௌரி கார்டன் பகுதியில் உள்ள உணவகத்தில் திடீரென பற்றிய நெருப்பினால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. நெருப்பில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ: கதறும் மக்கள்
0