டெல்லி: டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தி அமித்ஷா பேசிவருகிறார். கெஜ்ரிவால் அரசு மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து சச்சரவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதா என அவர் தெரிவித்துள்ளார். மக்களவையில் 9 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மசோதாக்கள் மீதான விவாதம் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்தாலும் மீண்டும் மோடி அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.