டெல்லி: டெல்லியில் ஆகஸ்ட் 22-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு தண்ணீர் திறக்க இயலாது என கர்நாடகா பிடிவாதமாக தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு உபரி நீர்தான் அதிகம் வந்துள்ளதால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், நடுவர் மன்றம், உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாதந்தோறும் தர வேண்டிய நீரை திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.