டெல்லி: தீபாவளி பண்டிகை கடந்தும் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருந்து மாறாமல் இருக்கிறது. தீபாவளி அன்று தலைநகர் முழுவதையும் பட்டாசு புகை சோழ்ந்ததால் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு மிக மோசமாக மாறியது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் குறியீடு 4 புள்ளிகளுக்கு மேல் நேர்ந்ததால் மூத்த குடிமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதாலும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
தீபாவளி முடிந்து பல நாட்கள் கடந்த பின்னரும் இன்றும் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருப்பதால் மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகாலை முதலே டெல்லியில் பனிமூட்டத்துடன் கூடிய புகை மூட்டம் யாகித்திருந்ததால் பார்வை திறன் குறைந்து வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். காற்று மாசுக்கு எதிரான டெல்லி அரசின் நடவடிக்கை தொடர்ந்தாலும் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.